காஞ்சிபுரம் : அத்திவரதர் வி ஐ பி தரிசனம் திடீர் ரத்து

Must read

காஞ்சிபுரம்

மின் கசிவால் அத்திவரதர் வி ஐ பி தரிசனம் பாதுகாப்பு கருதீ இன்று ரத்து  செய்யப்பட்டுள்ளது.

 

காஞ்சிபுரம் வரதசாமி கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் 48  நாட்கள் அத்திவரதர் தரிசன வைபவம் மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. சென்ற மாதம் வரை சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் தற்போது நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார்.

அத்திவரதர் தரிசனம் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே என்பதால் கூட்டம் அலைமோதி வருகிறது. பொது தரிசனத்துக்கு சுமார் 48 மணி நேரம் ஆகக் கூடும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வரும் 17 ஆம் தேதி அன்று மாலை 5 மணியுடன் தரிசனம் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் அத்திவரதர் தரிசன வளாகத்தில் விஐபிக்கள் தரிசனம் செய்யும் இடத்தில் மின்கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையொட்டி பாதுகாப்பு காரணமாக இன்று விஐபி தரிசனம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

நிதி அளித்தோர் அனுமதிச் சீட்டு வைத்திருப்போரை நாளை காலை தரிசனம் செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

More articles

Latest article