சென்னை:

த்திவரதர் தரிசனத்திற்கான கால அவகாசத்தை  நீட்டிக்க முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.

40 வருடங்களுக்கு ஒருமுறை 48 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் தரிசனம் கடந்த ஜூலை 1ந்தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இந்த தரிசனம் வரும் 16ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கக் கோரி சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சாம்ராஜ்ய சபா தலைவர் சுவாமி கோவிந்த ராமானுஜ தாசர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர், அத்திவரதர்  தரிசனத்தை நீட்டிக்கப் போவதில்லை என அறநிலையத் துறை அமைச்சரே அறிவித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் , தரிசன காலத்தை நீட்டிப்பது குறித்து தமிழ்நாடு அரசுதான் முடிவு செய்ய முடியும், இதில் நீதிமன்றம் உத்தரவிட முடியாது  எனகூறி தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.