டில்லி:

யற்கை எரிவாயு, விமான எரிபொருள் போன்ற பொருட்களையும் ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வர மத்தியஅரசு திட்டமிட்டு வருவதாக மத்தியஅமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இதுதொடர்பாக கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதில் இருந்து, அனைத்து வகையான பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில்,  பெட்ரோலிய பொருட்களுள் ஒன்றான இயற்கை எரிவாயு மற்றும் விமான எரிபொருளையும் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டு வரப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு, விமான எரிபொருள் ஆகிய பெட்ரோலிய பொருட்கள் கொண்டுவரப்படவில்லை. ஆனால் அவற்றையும் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள்  கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

இதன் பரீட்சார்ந்த முயற்சியாக இயற்கை எரிவாயுவை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர ஜிஎஸ்டி கவுன்சில் ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்தியஅமைச்சர் பிரதான், தற்போதைய நிலையில்,  “பெட்ரோலியத் துறையின் சிக்கலான தன்மை மற்றும் இந்தத் துறையில் மாநில அரசாங்கங்களின் வருவாய் சார்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி ஆட்சியின் எல்லைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளன.

ஆனால்,  ஏடிஎஃப் (aviation turbine fuel (ATF) மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்டவை நிறுவனங்கள் உள்ளீட்டில் செலுத்திய வரியை நிர்ணயிக்க உதவுவது மட்டுமல்லாமல், நாட்டில் எரிபொருட்களுக்கு வரிவிதிப்பதில் சீரான தன்மையைக் கொண்டு வரும். ஏடிஎஃப் ஒரு விமானத்தின் செலவில் ஏறக்குறைய பாதியை ஈடுசெய்கிறது  இது உள்ளுர் வாட் விகிதங்களுக்கு ஏற்ப மாறுகிறது. இதை ஒரே சீராக கொண்டு வரவும்,  சுற்றுச்சூழல் நட்பு இயற்கை எரிவாயுவின் பயன்பாட்டையும்  ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டு வருகிறது என்றவர்,  வரும் 2030 ஆம் ஆண்டில் இயற்கை எரிவாயுவின் பங்கு,  தற்போதைய 6.2 சதவீதத்திலிருந்து 15% ஆக அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதான்,   ஜிஎஸ்டி கவுன்சில் இந்த பிரச்சினையில் “பொருத்தமான நேரத்தில்” முடிவெடுக்கும் என்று தான் நம்புவதாக கூறினார். தற்போதுள்ள கட்டமைப்பின் கீழ், இந்த பொருட்கள் மையத்தின் கலால் வரி மற்றும் ஒரு மாநிலத்தின் மதிப்பு கூட்டப்பட்ட வரி (வாட்) ஆகியவற்றை ஈர்க்கின்றன. இவை இரண்டும் மற்ற அனைத்து வரிகளும் ஜிஎஸ்டியின் கீழ் அதன் வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டால் அவை மேன்மை அடையும் என்றும்,  ஐந்து பெட்ரோலிய பொருட்களின் வருவாய் மாநில அரசின் நிதிகளில் கணிசமான பகுதியைக் கொண்டிருப்ப தால், அவை சேர்ப்பதற்கான முடிவு மாநிலங்களின் நிதி நிலையைப் பொறுத்தது என்றும் கூறினார்.