சென்னை:
ரத்து அதிகரித்தால் தக்காளி விலை நேற்றைய விலையை விட சற்று குறைந்துள்ளது.

மழை, புயல் உள்ளிட்ட காரணங்களால் ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது. வழக்கமாக 80 லாரிகளில் கொண்டுவரப்படும் தக்காளி 40 லாரிகளில் மட்டுமே வந்தது.

இதனால் சில்லறை விற்பனை ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விலை அதிகரித்தது. இந்த திடீா் விலை உயா்வால் பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து பசுமைப் பண்ணை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.79-க்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதேவேளையில் வெளி மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து சற்று அதிகரித்தது. இதனால் சென்னையில் கடந்த செவ்வாய்க்கிழமை தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனையானது.

இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து கூடுதல் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டதால் புதன்கிழமை ஒரே நாளில் தக்காளி கிலோவுக்கு ரூ.35 குறைந்து சில்லறை விற்பனையில் ரூ.55 முதல் ரூ.60 வரையில் விற்பனையானது.

சென்னை கோயம்பேடு காய்கறிகள் விற்பனையகத்தில் தக்காளி ஒரு கிலோ ரூ.40, ரூ.50க்கு விற்பனையாகிறது.

நேற்றை விட இன்று தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.