காபூல்:

ஆப்கானிஸ்தான் தலைநகரில்  உள்ள அமெரிக்க தூதரகம் அருகே இன்று காலை பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 68 பேர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே பயங்கரமான வெடிகுண்டு வெடித்தது. இதில் தூதரகத்தன் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின. அந்த பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த குண்டு வெடிப்பில் சிக்கி பொதுமக்கள் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளதாகவும், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஆப்கன் அரசு தெரிவித்து உள்ளது. இதை ஆப்கன் நாட்டு பொது சுகாதாரத்துறை செய்தி தொடர்பாளர் வாஹித்துல்லா மாயர் உறுதிபடுத்தி உள்ளார்.

இதுகுறித்து கூறிய காபூல் நகர போலீஸ் அதிகாரி, குண்டு வெடித்ததை உறுதி செய்துள்ள நிலையில், அது எந்த வகையா குண்டு என்பது குறித்து விசாரித்து வருவதாகவும், இந்த குண்டு வெடிப்பை தலிபான் பயங்கரவாத அமைப்பு நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.