கொழும்பு:

லங்கையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டு அரசு பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகிறது.

இலங்கை கல்முனை பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை இலங்கை அரசின் அதிரடிப்படையினர்  வேட்டையாடும்போது இரு தரப்பினருக்கும் இடையே பலத்த துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச்சண்டையில் 5 பயங்கரவாதிகள்  உள்பட அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர் களும் பலியாகி உள்ளதாகவும், மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டு உள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்து உள்ளது.

கடந்த 21-ந் தேதி கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் பண்டிகை நாளில் இலங்கையில் உள்ள பல தேவாலயங்களில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்ற போதிலும், தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது.  குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தொடர் சோதனைகளை இலங்கை பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு உள்ளனர்.

கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் நேற்று மாலை  பொலிஸாருக்கும், மற்றொரு குழுவினருக் கும் இடையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடைபெற்றது. இதில், 15 சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களில் 6 ஆண்களின் சடலம் என்றும், 3 சடலங்கள் பெண்கள், 6 சடலங்கள் சிறுவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும், துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் உள்பட ஒரு பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக அந்த பகுதி முழுவதும்  அதிரடி படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.  மேலும் தீவிர சோதனை நடைபெற்று வருவதாகவும், ,ந்த துப்பாக்கி சண்டையில், அரசு படைகளுக்கு   எவ்வித உயிர்ச்சேதங்களும்  ஏற்படவில்லை என்றும் காவல்துறையினரின் செய்தி தொடர்பாளர்  ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.