மும்பை,

மும்பை  உளள ஒரு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 12 பேர் உடல் கருகி பலியானதாக கூறப்படுகிறது.

மும்பை கைரானி சாலையில் உள்ள ஒரு பிரபலமான  கடையில் இன்று காலை பயங்கரத் தீவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 12 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

அங்கு 25 வண்டிகளில் வந்த தீ அணைப்பு வீரர்கள்  தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீ விபத்தின் போது, அந்த கடைக்குள் பலர் தூங்கிக்கொண்டிருந்ததாகவும், எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த தீ விபத்தில் சிக்கிய அவர்கள் தீயில் கருகி மரணமடைந்துள்ளாகவும் கூறப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.