பெய்ஜிங்: 

சீனாவில் நள்ளிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த தொடர் நிலநடுக்கம் காரணமாக  இடிபாடுகளில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 134 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும் முதற்கட்ட தககவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிசுவானில் சுமார் அரை மணி நேத்திற்குள் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.

சீனாவின் உள்ளுர் நேரப்படி நள்ளிரவு 10.55 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2-வது நிலநடுக்கம் இன்று காலை மீண்டும் ஏற்பட்டது.

நேற்று இரவு ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆகவும், இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது. இதில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமானது.

அடுத்தடுத்த ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நில நடுக்கம் காரணமாக  உயரமான கட்டிடங்கள் குலுங்கியதாகவும் பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்து வருகின்றனர்.

இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 12 பேர் பலியாகி இருப்பதாகவும், 134 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கம் காரணமாக சுமார் 4000 பேர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் ஏராளமான கட்டிங்கள் சேதமடைந்து உள்ளதாகவும் மாநில நிர்வாகம் அறிவித்து உள்ளது.

ஏற்கனவே கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் சிசுவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 70 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.