உலகின் மிக உயரமான சிவலிங்கம் கன்னியாகுமரியில் அமைப்பு

ன்னியாகுமரி

லகின் மிக உயரமான 111.2 அடி உயர சிவலிங்கம் தமிழக – கேரள எல்லையில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக கேரள எல்லை மாவட்டமான கன்னியாகுமரியில் உதயம் குளம் கரை என்னும் இடத்தில் செங்கல் மகேஸ்வர சிவ பார்வதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆலயத்தில் உலகில் உயரமான சிவலிங்கம் அமைக்க ஆலய நிர்வாகம் முடிவு செய்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள் சிவன் கோவில்களை பார்வை இட்ட பிறகு இந்த லிங்கத்தின் வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டது.

கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பணி தற்போது 80% முடிவடைந்துள்ளது. இந்த லிங்கத்தின் உயரம் 111.2 அடி ஆகும். எட்டு நிலைகளில் உருவாகும் இந்த லிங்கத்தின் ஒவ்வொரு நிலையிலும் தியான மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சிவலிங்கத்தின் உள்ளே முனிவர்கள் குகையில் தவம் செய்வது, கடவுளர்களின் உருவங்கள் ஆகியவை சிலைகளாக செதுக்கப்பட்டுள்ளன.

மேல் பகுதியான எட்டாம் நிலையில் கைலாய மலையில் சிவனும் பார்வதியும் உள்ளது போன்ற அழகிய சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிவலிங்கத்தை இந்தியா புக் ஆஃப் ரிக்கார்ட் இன் ஒருங்கிணைப்பாளர் ஷாகுல் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது. அதன் பிறகு அந்த குழு இந்த லிங்கத்துக்கு உலகின் உயரமான சிவலிங்கம் என சான்று அளித்துள்ளது. இந்த வருட மகா சிவராத்திரி அன்று இதன் திறப்பு விழா நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: kanniyakumari, kerala border, World's highest sivalinga, உலகின் மிக உயர சிவலிங்க, கன்னியாகுமரி, கேரள எல்லை
-=-