சமீபத்தில் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த திருமணம் ஒன்று நடந்ததென்றால் அது கர்நாடக முன்னாள் பாஜக பிரமுகரும் பிரபல சுரங்க தொழில் அதிபருமான காலி ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம்தான். அதிநவீன டிஜிடல் எல்சிடி பத்திரிக்கையில் தொடங்கி கல்யானம் முடிந்தது வரை எல்லாமே ஆடம்பரம். ஆனால் அந்த திருமணத்துக்காக ஓடியாடி வேலை செய்த ஏழை பணியாளர்களுக்கு பழைய 500, 1000 நோட்டுக்களை கொடுத்து அலைய விட்ட விபரம் இப்போது வெளியாகியிருக்கிறது.

jreddy

திருமணத்தை ஒட்டி இசைநிகழ்ச்சி நடைபெற்ற பெங்களூரு ஹவுசில் ஒரு வாரமாக இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து முடித்த சன்னம்மா என்ற பெண்மணி மறுநாள் மாலை 4 மணி ரயிலில் ஊருக்கு திரும்பி செல்ல வேண்டியவர் தனக்கு தரப்படவேண்டிய சம்பளப் பணத்துக்காக காத்திருந்தார். ஆனால் மாலை 2.45 வரை சம்பளம் தரப்படவில்லை. பலரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாக அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரச்சொல்லி சம்பள பட்டுவாடா பண்ணியிருக்கிறார்கள். ஆனால் கொடுத்ததெல்லாம் பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள். இவற்றை எப்படி மாற்றுவது என்று அந்த பணியாளர்கள் நொந்துகொண்ட காட்சிகள் அரங்கேறியிருக்கிறது.
சன்னம்மா உள்ளிட்டவர்களுக்கு மட்டுமல்ல, அங்கு நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர்கள், பவுன்சர்கள், சமையல் கலைஞர்கள், மாடல்கள், வரவேற்பாளர்கள் அத்தனை பேருக்கும் இந்த நிலைதான். அவர்களுக்கு காசோலைகளாகவோ அல்லது 500, 1000 நோட்டுக்களாகவோதான் பணம் விநியோகிக்கபட்டது. காசோலை பவுன்ஸ் ஆகிவிட்டால் யாரைக் கேட்பது என்று நினைத்து பணமாக வாங்கிவிட்டு பலர் சில்லறைக்கு அலைந்த காட்சியையும் அங்கு காண முடிந்தது.
ஆனால் இவ்வளவு பிரச்ச்னைகள் மத்தியிலும் சன்னம்மா போலவே மலர் அலங்காரத்துக்கு வந்திருந்த ஒரு பெண்மணி வெகுநாளைக்கு பிறகு இந்த திருமண விழாவில்தான் தாம் நல்ல சாப்பாடு திருப்தியாக சாப்பிட்டதாக கூறி ஆறுதலடைந்திருக்கிறார்.
Courtesy: Anisha Sheth| Sarayu Srinivasan | www.thenewsminute.com