ரவக்குறிச்சி

நேற்று நடந்த அரவக்க்குறிச்சி சட்டப்பேர்வை இடைத்தேர்தலில் 84.28% வாக்குகள் பதிவாகின.

நேற்று மக்களவை இறுதிக் கட்ட தேர்தலுடன் நடந்த சட்டப்பேரவை இடைதேர்தலில் கரூர் மாவட்டம் அர்வக்குறிச்சியிலும் தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் 99,052 ஆண்கள், 1,06,219 பெண்கள், மூன்றாம் பாலினர் 2 என மொத்தம் 2,05,273 வாக்காளர்கள் உள்ளனர். தொகுதியில் 159 இடங்களில் 250 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்றைய கடும் வெயிலிலும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்தனர்.

நேற்று காலை 9 மணிக்கு 10.51 % வாக்குகளும் காலை 11 மணிக்கு 34.24 % வாக்குகளும் பதிவாகின. அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து மதியம் 1 மணியளவில் 52.68 சதவீதம், மதியம் 3 மணியளவில் 66.38 சதவீதம், மாலை 5 மணிக்கு 79.49 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் இறுதியாக 84.28 சதவீதம் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அரவக்குறிச்சியில் 10 வாக்குச் சாவடிகளில் மாலை ஆறு மணி ஆன பிறகும் மக்கள் வாக்களிக்க காத்திருந்தனர். காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்களும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்ததால் வாக்குப்பதிவு தாமதமக தொடங்கியது.

நேற்று இடைத் தேர்தல் நடந்த மற்ற தமிழக சட்டப்பேரவை தொகுதிளான சூலூரில் 79.41 % வாக்குகளும், திருப்பரங்குன்றத்தில் 74.17% வாக்குகளும், ஒட்டப்பிடாரத்தில் 72.81% வாக்குகளும் பதிவாகின. ஏற்கனவே நடந்த மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது கை ஆட்காட்டி விரலில் மை வைக்கப்பட்டிருந்தது. அதனால் இந்த முறை இடதுகை நடுவிரலில் மை வைக்கப்பட்டது.