சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, இன்று திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ஏராளமான சலுகைகள் அள்ளி வீசப்பட்டு உள்ளன. அதன்படி,
தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை கொண்டுவரப்படும்
பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் வழங்கப்படும்
நகர்ப்புற – கிராமப்புற அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்
மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்ல பயணச்சீட்டு வழங்கப்படும்
இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்படும்
அரசு பணியில் 10 ஆண்டுகளுக்கு மேலுள்ள தற்காலிக ஊழியர்கள் நிரந்தரம் செய்யப்படுவர்
அரசு வேலையில் பெண்களுக்கு 40%இடஒதுக்கீடு
கிராமப்புற பூசாரிகளின் ஊதியம், ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்
பழங்குடியின பட்டியலில் மீனவர் சமுதாயம்
கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்படும்
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை துரிதப்படுத்தப்படும்
ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க நடவடிக்கை
சிறு வணிகர்களுக்கு ரூ.15 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்
முதலமைச்சரின் நேரடிக்கட்டுப்பாட்டில் தனித் துறை உருவாக்கப்பட்டு, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்.
பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டுத் திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும்.
சென்னையில் திராவிட இயக்கத் தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மேம்படுத்தப்படும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படாது.
பயணிகள் பேருந்துகள் அனைத்திலும் ஜி பி எஸ் வசதி அமைக்கப்படும்.
பெரிய மாநகராட்சிகளில் பறக்கும் சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
பதினைந்து நாட்களில் புதிய ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.
பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் களைய சைபர் காவல் நிலையங்கள் உருவாக்கப்படும்.
குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக்க கலைஞர் சிறப்பு வீட்டு வசதித் திட்டம் கொண்டு வரப்படும்.
நகர்ப்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும்.
கிராம நத்தத்தில் உள்ள வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கப்படும்.
சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் லாரிகள் மூலமாக நீர் வழங்குவதை தவிர்க்க குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்.
அனைத்துக் கிராமங்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கப்படும்.
கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
முறையான பயிற்சி பெற்று 14 ஆண்டுகளாக வேலையின்றி காத்திருக்கும் 205 அர்ச்சகர்களுக்கும் உடனடி பணி நியமனம் செய்யப்படும்.
நடைபாதை வாசிகளுக்கு இரவு நேரக் காப்பகங்கள் அமைக்கப்படும்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக பணியர்த்தி கால முறை ஊதியம் வழங்கப்படும்.
இயற்கை எரிவாயுவில் இயங்கும் புகையில்லா பேருந்துகள் தமிழக மாநகராட்சி பகுதிகளில் இயக்கப்படும்.
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுக்கூடைத் திட்டம் அமல்படுத்தப்படும்.
பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகத் துறையினர் நலன் காக்க தனி ஆணையம் அமைக்கப்படும்.
பத்திரிக்கையாளர், ஊடகத்துறையினர் ஓய்வூதியமும் குடும்ப நிவாரண நிதியும் உயர்த்தப்படும்.
சிறுகுறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்க 10 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படும்!
மருத்துவக் கல்லூரி இடங்கள் அமைத்தும் மாநிலத் தொகுப்புக்கே கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலையில்லா பட்டதாரிகள் குறுந்தொழில் தொடங்க 20 லட்சம் வரை கடன் வசதி வழங்கப்படும்.
சிறப்பு தாய் சேய் நலத்திட்டம் என்ற பெயரால் கருவுற்ற பெண்களுக்கு வீடி தேடி மருத்துவ வசதி வரும்.
கணவரால் கைவிடப்பட்ட மற்றும் கைம் பெண்களில் 35க்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
35 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத, ஆதரவற்ற மகளிருக்கு அவர்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
புதிய தனி கனிம வள அமைச்சகம் உருவாக்கப்படும். கனிமங்கள், தாது மணல், மணல் ஆகிய தொழில்கள் அமைத்தும் டாமின் நிறுவனத்தின் கீழ் அரசே நடத்தும்.
அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி வழங்கப்படும். கல்வி நிறுவனங்களில் வை ஃபைவ் வசதி செய்து தரப்படும்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்.
நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ 2500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ 4000 ஆக உயர்த்தி வழங்கப்படும்!
நீர்ப்பாசனத் துறைக்கு மாற்றாக புதிய நீர்வள ஆதாரங்கள் அமைச்சகம் உருவாக்கப்படும்!
நீர் மேலாண்மை ஆணையம் அமைத்திடச் சட்டம் கொண்டு வரப்படும்!
முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் 10 ஆயிரம் கோடியில் பெரிய ஏரி, குளங்கள் பாதுகாப்புச் சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
அதிமுக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கடன் சுமையை சீர் செய்ய பொருளாதார உயர் மட்டக் குழு அமைக்கப்படும்!
சென்னை நகரை வெள்ளப்பெருக்கத்தில் இருந்து பாதுகாக்க சென்னைப் பெருநகர் வெள்ளத் தடுப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்படும்!
வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
வேளாண் பொருள்களை உரியவிலையில் விவசாயிகள் விற்பனை செய்ய வேளாண் பொருள்கள் விலை நிலவரம் தெரிவிக்கும் அமைப்பு உருவாக்கப்படும். அதாவது மார்க்கெட்டிங் ஏஜென்சி அமைக்கப்படும்.
வாழை,மஞ்சள்,மரவள்ளிக் கிழங்கு, பருப்பு, மிளகாய், சிறுதானியங்கள், தேயிலை, எண்ணெய் வித்துக்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும்.
இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு உருவாக்கப்படும்.
தமிழ் எழுத்து வரிவடிவம் சிதைக்கப்படுவதைத் தடுக்க புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்!
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலனைப் பேண வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை அமைக்கப்படும்.அதிமுக அரசால் சிதைக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை மீட்டெடுக்க தனி அமைச்சகம் அமைக்கப்படும்.
மத்திய அரசின் இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான உச்சவரம்பு 25 லட்சமாக உயர்த்திட மத்திய அரசை வலியுறுத்துவோம்.
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.
நரிக்குறவர், குருவிக்காரர், வேட்ட்டைக்காரர், லம்பாடி, படுகர் சமுதாயத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கபப்படும்.
மாற்றுத்திறனாளி மாணவர்க்கு 3 சக்கர மோட்டார் வாகனம் வழங்கப்படும்.
வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்.
பக்கிம்காம் கால்வாய் சீரமைக்கப்படும்.
சென்னை சிறுசேரி பகுதியில் நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
தமிழகத்தில் ரயில் பாதை இல்லாத 16 முக்கிய வழித்தடங்களில் புதிய ரயில் பாதை அமைக்க வலியுறுத்துவோம்.
திருச்சி,மதுரை, சேலம், நெல்லை,கோவையில் மெட் ரோ ரயில் திட்டங்கள் கொண்டு வரப்படும்.
வேலூர், கரூர், ஓசூர், இராமநாதபுரத்தில் புதிய விமானநிலையங்கள் அமைக்கப்படும்.
சிறுகுறு விவசாயிகளின் கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
100 நாட்கள் வேலைத் திட்டம், 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும்.
30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
* அரசு உள்ளூர் பேரூந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும்.
இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும். இதற்கு திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் என்று பெயர்.