சென்னை: திமுக  தலைவர் ஸ்டாலின் இன்று தேர்தல் அறிக்கையில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி  அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்

பணியில் இருக்கும் காவலர் இறந்தால் ரூ.1 கோடி வழங்கப்படும்

அரசு பெண் ஊழியர் பேறுகால விடுப்பபு 12 மாதங்களாக அதிகரிப்பு

மகளிர் மகப்பேறு உதவித் தொகை ரூ.24 ஆயிரமாக அதிகரிக்கப்படும்

ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு உணவு கொடை திட்டம்

அரசு வேலையில் பெண்களுக்கு 30 சதவீதத்திலிருந்து 40 ஆக அதிகரிப்பு

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்

ஆறுகள் மாசடையாமல் தடுக்க பாதுகாப்பு திட்டம் தொடங்கப்படும்

சென்னை மாநகராட்சியில் லாரி நீர் தவிர்த்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம்

சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ, 10,000 மானியம்

5 ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி

கல்வி நிறுவனங்களீல் 3.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்

திருச்சி, சேலம், கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் வசதி கொண்டுவரப்படும்

குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்

கூட்டுறவு வங்கியில் 5 சவரன் வரை நகைக்கடன் ரத்து செய்யப்படும்

புதிதாக 200 தடுப்பணைகள் அமைக்கப்படும்