சென்னை:
மிழக சட்டசபை நிகழ்ச்சிகளை மக்களுக்கு தெரியும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்தால் என்ன? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழக சட்டசபை நிகழ்ச்சிசகள் பொதுமக்கள் தெரிந்துக் கொள்ளும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் எலிசபத் சேஷாத்திரி ஆஜரானார்.
chennia
இந்த மனுமீதான விவசாரணை இன்று தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி ஆர்.மகா தேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, ‘இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ என்று கேட்டார்.
இதையடுத்து, அரசின் கோரிகையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பாராளுமன்றம், ராஜ்யசபா விவா தங்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பல மாநிலங்களிலும்ம நேரடி ஒளிபரப்பு வசதி உள்ளது. அப்படி இருக்கும்போது தமிழக சட்டசபையின் நிகழ்வுகள் ஏன் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.
பொதுநல மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் எலிசபத் சேஷாத்திரி, ‘இந்த நேரடி ஒளிபரப்புக்கு பெரும் தொகை செலவாகும் என்று தமிழக அரசு கூறலாம். ஆனால், கேரளாவில், சட்டசபை நிகழ்வுகள் தேசிய தகவல் மையம் (என்.ஐ.சி.) மூலம் இலவசமாக இணைய தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அந்த முறையை தமிழக அரசு பின்பற்றலாம்’ என்று கூறினார்.\
வழக்கு விசாரணையை அக்டோபர் 3-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.