சென்னை; ஆளுநர் உரைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளதற்க, அதிமுக, பாஜக எதிர்ப்பு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்த திராவிட மாடல், அமைதிப்பூங்கா, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் போன்ற தலைவர்களின் பெயர்களையும் ஆளுநர் வாசிக்கவில்லை இது சலசலப்பை ஏற்படுத்தியது. சுமார் 50 நிமிடம் ஆளுநரை உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசித்தார்.
அதைத்தொடர்ந்து, முதலைச்சர் ஸ்டாலின் பேசும்போது, ஆளுநர் சில வார்த்தைகளை தவிர்த்துள்ளது மரபு மீறிய செயல் என்றும், தமிழ்நாடு அரசு தயாரித்து தந்த உரையை ஆளுநர் வாசிக்கவில்லை என ஆளுநர் மீது குற்றச்சாட்டுகளை கூறி, தீர்மானம் கொண்டு வர வேண்டும் என பேசிக்கொண்டிருக்கையில், ஆளுநர் சட்டப்பேரவையில் வெளியேறினார். இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அதிமுக, பாஜக எம்எல்ஏக்களும், முதல்வரின் உரைக்கும், தீர்மானத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து, அவையில் இருந்து வெளியேறினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் கொண்டுவந்தது மரபு அல்ல” ஆளுநர் உரையை கேட்க வந்தோமே தவிர, முதல்வர் உரையை அல்ல என கடுமையாக சாடினார். மேலும், ஆளுநர் உரையில் புதிய திட்டங்கள் இல்லை, எனவே மக்களுக்கு பயன் பெறும் திட்டங்கள் இல்லை என்பதால், ஆளுநர் உரை வெத்து உரை என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அதுபோல, ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதை ஏற்றுக்கொள்ள முடியாது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ, வானதி சீனிவாசன், திமுகஅரசு ஒரு கேவலமான நாடகத்தை இன்று அரங்கேற்றி உள்ளது. ஆளுநரிடம் முறையாக ஒப்புதல் பெறாமல் ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டுள்ளது பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளதுடன், திமுக, அதன் கூட்டணி கட்சிகளை தூண்டி விட்டுள்ளது, “இன்றைக்கு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினர் நடந்துகொண்ட போக்கு மாநில நலனுக்கு உகந்தது அல்ல. ஆளுநர் அரசு கொடுக்கும் உரையில் இருப்பதை பேசுவார். ஆனால் ஆளுநர் நீங்கள் நினைப்பதை எல்லாம் பேச வேண்டும் என்று அவசியமில்லை, உங்கள் சித்தாந்தை ஆளுநர் போற்றிப் புகழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். உங்கள் சித்தாந்தத்தை ஆளுநர் மீது நீங்கள் திணித்துள்ளீர்கள். அரசு சொல்வதை மட்டுமே பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஆளுநருக்கு இல்லை. நீங்கள் உங்களது அதிகாரத்தை ஆளுநர் மீது திணிக்க முயல்கிறீர்கள். ஓரு ஆளுநரை அவமதித்துள்ளீர்கள் என்று கூறியதுடன், திமுக நினைப்பதை ஆளுநர் பேசவில்லை என்பதற்காக, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கூப்பிட்டு, அசிங்கப்படுத்துறீங்களா? இதுதான் ஜனநாயகமா? என கேள்வி எழுப்பினார்.