சென்னை:
சஸ்பெண்டு முடியும் வரை எஞ்சியுள்ள 10 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டசபை கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக சட்டசபை கொறடா அறிவித்து உள்ளார்.
கடந்தவாரம் சட்டசபையில் ஏற்பட்ட அமளியை தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 79 பேர் ஒரு வார காலம் சஸ்பெண்டு செய்யப்ப ட்டனர். வரும் 29ந்தேதி வரை அவர்களது சஸ்பெண்டு காலம் உள்ளது. எதிக்கட்சிகள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும், சபாநாயகர் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய மறுத்து விட்டார்.
இதையடுத்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட அன்று கலந்துகொள்ளாத மீதமுள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர்களான 10 பேரும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட உறுப்பினர்களின் உத்தரவு ரத்து செய்யப்படாதது வரை இன்று முதல் சட்ட பேரவை கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்று திமுக கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.
வரும் 29ந்தேதியோடு சஸ்பெண்டு உத்தரவு முடிவடைகிறது. அதன்பிறகு சட்டமன்ற பேரவை கூட்டத்தில் திமுக பங்குபெறும் என்று தெரிகிறது.
சட்டமன்றத்தில் திமுகவினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து சென்னை ஐகோர்ட்டில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel