டெல்லி: 2022ம் ஆண்டு 5 மாநில சட்டமன்ற தேர்தலை நடத்துவோம் என இந்திய தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
நடப்பாண்டு தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடத்தியதே, கொரோனா தொற்று தீவிரமாக பரவ காரணம் என்று பொதுமக்கள் மட்டுமின்றி, உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றமும் குற்றம் சாட்டியது.
இந்த நிலையில், அடுத்தாண்டு மார்ச் மாத வாக்கில் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் தேர்தலை நடத்துவோம் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்து உள்ளார். கொரோனா உச்சம் பெற்றிருந்த நிலையிலும், பீகார் தேர்தலை 2020ம் ஆண்டு வெற்றிகரமாக நடத்தியதாகவும், 2021ம் ஆண்டு மேற்கு வங்க தேர்தலை நடத்தியதாகவும் பெருமிதத்தோடு தெரிவித்து உள்ளார். அதுதொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.
அதனால், அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநில தேர்தல்கள் மார்ச் மாதத்திற்குள் நடத்தப்படும் என்றும், உத்தபிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.