சென்னை: பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொருளாளரான பிரேமலதா விஜயகாந்த், சைக்கிளில் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின்போது, அதிமுக உள்பட பல கட்சிகளிடம், அதிக தொகுதிகளைக் கேட்டு, கூட்டணி பேரம் நடத்திய வந்த பிரேமலதா, எந்தவொரு கட்சியும் மதிக்காததால், சிறுகட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டார். ஆனால், அவருக்கு மாபெரும் தோல்வியை மக்கள் பரிசாக வழங்கி பாம் புகட்டினர்.
இதனால், கடந்த 2 மாதங்களே பிரேமலதா வெளியே வராமல், ஆள் அரவமின்றி இருந்து வந்தார். அவரது பேச்சுக்களே காணாமல் இருந்தது. இந்த நிலையில், இன்று தேமுதிகவினர் நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்தில், பிரேமலதா விஜயகாந்த் சைக்கிளில் வந்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற தேமுதிக போராட்டத்தில் கலந்துகொண்ட பிரேமலதா, போராட்டம் நடைபெறும் பகுதிக்கு முன்பாக, 500 மீட்டர் இடைவெளியில் இருந்து சைக்கிள் மூலமாக வந்து, தனது கண்டனத்தை பதிவு செய்தார்.