சென்னை: தமிழகம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலையொட்டி, அமமுகவில் மார்ச் 3ம் தேதிமுதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்து உள்ளார்.

அ.ம.மு.க தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள், வரும் 3-ம் தேதி புதன்கிழமை முதல் 10-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் போட்டியிடுவதற்காக 10 ஆயிரம் ரூபாயையும், புதுச்சேரியில் போட்டியிட 5 ஆயிரம் ரூபாயும் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்று, படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் முழுமையாக பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Patrikai.com official YouTube Channel