சென்னை: சட்டசபை நூற்றாண்டு விழா – கருணாநிதி உருவப்படம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் சென்னை வருகிறார்.

தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா இன்று பிற்பகல்   நடைபெறவுள்ளது. இதில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு கருணாநிதியின் முழு உருவப்படத்தை திறந்து வைக்கவுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படம் திறப்பு விழாவை யொட்டி தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி சென்னை முழுவதும் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா நாளை மாலை 5 மணியளவில்  நடைபெறுகிறது. இதையொட்டி, ‘டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10 மணிக்கு புறப்பட்டும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மதியம் 12.45 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர், கிண்டி ஆளுநா் மாளிகைக்குச் செல்கிறாா்.

அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து மாலை 4.35 மணியளவில் புறப்பட்டு சாலை மார்க்கமாக சட்டசபை விழா அரங்குக்கு மாலை 5 மணிக்கு வருகை தர உள்ளார். அதன்பிறகு விழா நிகழ்ச்சிகள் தொடங்கு கின்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க குறிப்பிட்ட  நபர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,  234 எம்எல்ஏக்கள், முன்னாள் சபாநாயகர்கள், சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், தமிழக மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள், தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்ட ஒரு சில உயர் அதிகாரிகள் மட்டுமே நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் சட்டமன்ற செயலாளர்கள், பத்திரிகையாளர்கள் 30 பேர் என 320 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது

சட்டமன்றத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் அமரும் முதல் வரிசை, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியினர் அமரும் முதல் வரிசையில் உள்ள நாற்காலிகள் எடுக்கப்பட்டு அதற்கு பதிலாக 2 மீட்டர் இடைவெளியில் அமரும்படி இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரும் நிலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை வண்ணவிலக்குகளால் ஜொலிக்கிறது.

சட்டசபையில் திறக்கப்பட உள்ள கருணாநிதியின் உருவப்படம்   ராயப்பேட்டையில் உள்ள அரசு ஆர்ட்ஸ் ஓவியரால் வரையப்பட்ட குறிப்பிடத்தக்கது.