ஹாஜோ, அசாம்

ழிந்து போனதாக அறிவிக்கப்பட்ட ஆமை இனத்தை மீண்டும் அசாம் கோவில் குளம் ஒன்று வாழ வைத்துள்ளது.

கறுப்பு நிறத்தில் மிருதுவான மேல் பகுதியுடன் காணப்படும் ஒரு வகை ஆமை வடகிழக்கு மாநிலமான அசாமில் அதிகமாக காணப்பட்ட விலங்காகும். அசாம் மாநில மக்கள் ஆமை உண்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள். ஆகவே அசாம் மாநிலத்தில் உள்ள ஆமைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. கடந்த 2002 ஆம் வருடம் இந்த வகை ஆமை அழிந்து போனதாக அறிவிக்கப்பட்டது.

அத்துடன் இதே இனத்தை சார்ந்த மயில் நிற ஆமைகள் அரிய வகை என அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் ஹாஜோ என்னும் புண்ணிய தலம்  உள்ளது. இங்கு ஹயக்ரீவ மாதவர் ஆலயம் உள்ளது. இந்த குளத்தில் இந்த வகை ஆமைகள் சமீபத்தில் தென்பட்டுள்ளன. கோவில் குளம் என்பது புனிதமான இடம் என்பதால் இங்குள்ள ஆமைகளை யாரும் பிடிக்காமல் இருந்துள்ளனர்.

இதை ஒட்டி இந்நகரில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றை சேர்ந்த ஜெயாதித்ய புர்கயஸ்தா என்பவர் இந்த ஆமைகளை மீண்டும் வளர்க்க முடிவு செய்துள்ளார். இதன் முதல் கட்டமாக ஆமைகளுக்கு உணவளித்து வளர்த்து இனப்பெருக்கம் செய்வித்துள்ளார்.

கடந்த ஜனவரி அன்று 35 ஆமைக் குஞ்சுகள் அருகில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.    அதன் பிறகு குளத்தில் மேலும் ஆமைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.   இந்த விவரம் அறிந்து இந்த கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவில் குளத்தில் உள்ள இந்த ஆமைகளுக்கு உணவு அளித்துவருகின்றனர்.