கவுகாத்தி:
படத்தில் மூட்டையை தன் முதுகில் சுமந்து செல்பவர் சுமை தூக்கும் தொழிலாளி அல்ல. அஸ்ஸாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை தனது முதுகில் சுமந்து செல்கிறார் – அப்பகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூப் ஜோதி.

அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் நீர்நிலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல குடியிருப்பு பகுதிகளுக்கும் வெள்ளம் புகுந்துவிட்டது. இதனால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
உணவு, குடிநீருக்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.இந்த வகையில் மரியானி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூப்ஜோதி குருமி என்பவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் நிவாரண பொருட்கள் அடங்கிய மூட்டை அவரே முதுகில் சுமந்து சென்று வீடுகள் தோறும் வழங்கி வருகிறார். அவர் மூட்டை தூக்கிச் செல்லும் புகைப்படம் சமூக வளைதளங்களில் வெளியானது. இ ந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இவரது தாய் ரூபம் குர்மி ஏற்கனவே இந்த தொகுதியில் போட்டியிட்டு அமைச்சராக இருந்தார். இவரது மறைவை தொடர்ந்து ருப்ஜோதி குருமி இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]