வுகாத்தி

சாம் மாநில நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா  திருமணத்தின் போது ஏழைப்பெண்களுக்கு ரூ. 38,000 மதிப்புள்ள தங்க நகை இலவசமாக வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஒவ்வொரு மாநில அரசும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. பல மாநிலங்கள் கடன் தள்ளுபடி போன்ற நலத்திட்டங்களை அறிவிக்கும் நேரத்தில் வடகிழக்கு மாநில அரசுகள் மக்களுக்கு தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருட்களை இலவசமாக அளிக்கப் போவதாக அறிவித்து வருகின்றன.

நேற்று முன் தினம் அசாம் மாநில சட்டப்பேரவையில் பாஜக நிதி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவினால் பாஜகவுக்கு இம்மாநிலத்தில் தற்போது  கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதை சமாளிக்க ஏராளமான நலத்திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பல திட்டங்கள் பெண்களை குறி வைத்து அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிதி நிலை அறிக்கையில் பனிரெண்டாம் வகுப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறும் பெண்களுக்கு .ஈ பைக் இலவசம், படிப்புச் செலவுக்கா ரூ.50,000 உதவித் தொகை மற்றும் கல்விக் கடன் உடனடியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கிலோ அர்சி ரூ.1 என்னும் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக திருமணம் செய்துக் கொள்ளும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.38000 மதிப்புள்ள 10 கிராம் தங்க நகைகளை அரசு இலவசமாக வழங்க உள்ளது. இதற்கான வருட வருமான உச்சவரம்பு ரூ.5 லட்சம் ஆகும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.