தராபாத்

சிறுவர்களை தீவிரவாத மயமாக்கலில் இருந்து விடுவிக்க வேண்டும் என முப்படை தளபதி பிபின் ராவத் தெரிவித்ததை அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார்.

முப்படைகளின் பொது தளபதி பிபின் ராவத் நேற்று நடந்த ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டார்.   அப்போது அவர் நாடெங்கும் சிறுவர் மற்றும் சிறுமியர்கள் தீவிரவாத மயமாக்கலில் சிக்கிக் கொண்டு தீவிரவாதிகள் ஆகி விடுவதாகத் தெரிவித்தார்.  அத்துடன் அவர்களை இதிலிருந்து மீட்க நாடெங்கும் முகாம்கள் அமைக்கவேண்டும் எனவும் அப்போது பிபின் ராவத் கூறினார்.

இதற்கு இஸ்லாமியத் தலைவரும் ஐமிம் கட்சி நிறுவனர் மற்றும் மக்களவை  உறுப்பினருமான அசாதுதின் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர், “முப்படைகளின் பொதுத் தளபதி பிபின் ராவத் தீவிரவாத மயமாக்கலால் பாதிக்கப்பட்டோரை மீட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  அசாம் மாநிலத்தில் உள்ள வங்க இஸ்லாமியர்கள் குடியுரிமை பெறுவதைத் தடுப்போரை யார் தீவிரவாதத்தில் இருந்து மீட்பது?

பெஹ்லுகான் மற்றும் அக்லாக் போன்றோர் கும்பல் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களைக் கொன்றவர்களை தீவிரவாத மயமாக்கலில் இருந்து யார் மீட்பது?  கொள்கை முடிவுகளை பொது நிர்வாகம் எடுக்க வேண்டும்.  ராணுவத் தலைவர் எடுக்கக் கூடாது. இவ்வாறு அரசுக் கொள்கை மற்றும் அரசியல் கருத்துக்களைச் சொல்வதன் மூலம் ராணுவ அதிகாரி நிர்வாக தலைமையை குறை கூறுகிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.