ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், பாகிஸ்தானை 3-2 கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
மலேசியாவில் ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மலேசியாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் தென் கொரிய அணியை நேற்று வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி நுழைந்தது. இன்று இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொண்டது.
இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதியதால் இந்த போட்டி ஹாக்கி ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டியது.
தொடக்கம் முதலே இருநாட்டு அணி வீரர்களும் வெறித்தனமாக விளையாடினர். இரு அணிகளும் கோல் அடிக்கும் முனைப்பில் விளையாடினார்கள். ஆனால் முதல் காலிறுதி நேரமான 15 நிமிடங்களில் இரண்டு அணி வீரர்களாலும் கோல்கள் அடிக்க முடியவில்லை.
2-வது 15 நிமிடத்தில் இந்தியா சிறப்பாக விளையாடி இரண்டு கோல்கள் அடித்தது வெற்றியை உறுதி செய்தது. அதையடுத்து பாகிஸ்தான் ஒரு கோல் அடித்தது. இ தனால் முதல் பாதி பாதி நேர ஆட்டமான 30 நிமிடத்தில் இந்தியா 2-1 என முன்னிலைப் பெற்றது.
3-வது காலிறுதி நேரத்தில் பாகிஸ்தான் வீரர் ஒரு கோல் அடிக்க ஆட்டம் 2-2 என சமநிலையில் இருந்தது.
அதன்பின் 4-வது மற்றும் கடைசி காலிறுதி ஆட்டத்தில் இந்தியா மேலும் ஒரு கோல் அடித்தது.
இதனால் இந்தியா 3-2 என முன்னிலைப் பெற்றது.
கடைசி 9 நிமிடங்களில் பாகிஸ்தான் கோல் பல முறை முயன்றது. ஆனால் இந்திய வீரர்கள் துடிப்பாக ஆடி பாகிஸ்தானை கோல் அடிக்க அனுமதிக்காமல் தடுத்து விளையாடினர்.
இதனால், இந்தியா 3-2 என பாகிஸ்தான் வீழ்த்தி ஆசிய சாம்பின்ஸ் டிராபி கோப்பை வென்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 2வது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.