மேஷம்

பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீங்க. சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும். அரசியல்துறையினருக்கு பணநெருக்கடி குறையும். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவங்களுக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் எளிதில் வந்து சேரும். வீடு, வாகனம் வாங்க கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தால் அதுவும் கைகூடும். எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீங்க. குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் உண்டு. புதிய உத்தியோகத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். வளைகாப்பு, சீமந்தம், திருமணம் போன்ற சுபநிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும்

சந்திராஷ்டமம் :  அக்டோபர் 17 முதல் அக்டோபர் 19 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

ரிஷபம்

அறிவுரை தேவைப்படும் வாரம். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலர், சுயதொழில் தொடங்குவதில் மும்முரம் காட்டுவர். மகன் .. மகள் பற்றி பயம் வேண்டாம்.  கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட அவங்க எவ்ளோ சாஃப்ட் ஆயிட்டாங்கன்னு நினைச்சுப் பாருங்க. குழந்தைகள் வயிற்றில் பாதாம்கீர் வார்ப்பாங்க. வார மத்தியில பேச்சிலும் செயலிலும் ரொம்ப கேர்ஃபுல்லா இருங்கப்பா. பொதுவாழ்வில் இருப்பவர்கள், இழந்த பதவியை மீண்டும் பெறுவர். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கவனம் தேவை.

மிதுனம்

மறைமுக எதிர்ப்புகள் நீங்கும் வாரம். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்குவன்மையால் நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். சேமிப்பும் உயரும். உங்களோட குடும்பத்தினரின் தேவைங்களை நிறைவேற்றிக் கொடுப்பீங்க. நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீங்க. தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். பொதுவாகவே சட்டென்று யாரையும் எதிர்த்துப் பேசாமல் இருந்தால் நல்லது. வெற்றி வெற்றி வெற்றி. தொழிலும் சிறக்கும் பணமும் பெருகும். பேச்சில் கவர்ச்சி கூடும்.  பயங்கர இக்கட்டான நிலையையெல்லாம் தாண்டி வந்தாச்சு. நல்ல நேரம் கூப்பிட்ட தொலைவில் இருக்கு. கவலை வேண்டாம்.

கடகம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு, வீண் அலைச்சல் குறையும். அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீங்க. குடும்பத்துல நிம்மதி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீங்க. பெண்களுக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். குழந்தைங்க  மேடை மேல ஏறி பெருமிதமாய்ச் சுற்றிலும் பார்த்துவிட்டுப் பரிசுகள் வாங்குவாங்க. டாடிக்கு வெளிநாட்டு லாபங்களும் வருமானமும் வரும். அருமை தெரியாமல் யாரையும் எடுத்தெறிய வேண்டாம். அப்புறம் உண்மை தெரிஞ்சு ஃபீல் செய்வீங்க. பாராட்டு குவியும். தொழிலில் இத்தனை பெரிய முன்னேற்றம் நீங்க பார்த்து ரொம்ப நாளாகுது. கிரேட். எதையுமே செய்து முடிக்க தீவிரமாக முயற்சித்தால், ஓரளவாவது  பலன் கட்டாயம் கிடைக்கும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்க. உத்தியோகத்தில், சக ஊழியர்களின் பணியையும் சேர்த்து செய்யும் நிலை வரலாம்.

சிம்மம்

பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும். கலைத்துறையினருக்கு நிதி உதவி கிடைக்கும். அரசியல் துறையினருக்கு அரசாங்கம் மூலம் சாதகமான உதவி கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் சிரமமில்லாமல் பணிகள் நடைபெறும். வாகனம் வாங்கவீங்க. படிப்பில் ஜமாய்ப்பீங்க. கல்யாணம் ஆகுமா என்று ஏங்கிக் காத்திருந்தீங்க. இதோ… ரெடியா.. கடைகடையா ஏறி இறங்கி சேலையும் நகையும் வாங்கவே நேரம் சரியாப் போகும். பிசியாயிடுவீங்க. நண்பர்கள் நல்ல அட்வைஸர்களா இருப்பாங்க.. திடீர்னு எதிர்பார்க்காத இடங்களிலிருந்து இன்கம்… லாபம் வரும். வேலை பார்க்கும் இடத்தில் உங்க மதிப்பு கும்முன்னு உயரும்.   சில விஷயங்களை சஸ்பென்ஸாய் வைச்சிருந்து, வெற்றி பெற்றவுடன் சர்ப்பிரைஸாய் மற்றவர்களுக்கு அறிவிப்பீங்க.  ஹாப்பி.

கன்னி

பெண்களுக்கு தாய் வீட்டில் இருந்து உதவிகள் கிடைக்கும். தொழில் லாபகரமாக நடக்கும். கடன், பாக்கிகள் வசூலாகும். போட்டிகள் இருந்தாலும் அதிர்ஷ்ட காற்று உங்களுக்கு சாதகமாக வீசும். சற்று சந்தேகத்துடன் செய்த முதலீடுகள் நல்ல லாபம் தரும். சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள். சந்தோஷமான… சுபமான.. மற்றும் தெய்வீகமான ஃபங்க்ஷன்ஸில் கலந்துக்குவீங்க. விருந்து பலமாய்த்தான் இருக்கும். எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். உடன்பிறப்புகளின் திருமண வைபவங்கள் சிறப்பாக நடைபெறும். வழக்குகள் சாதகமாகும். வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பீங்க. படிப்பை முடித்த உங்க பிள்ளைங்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும். கூட்டுத் தொழில் புரிவோர் தனித்து இயங்க சந்தர்ப்பம் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், சுயதொழில் செய்வது பற்றி சிந்திப்பாங்க. லவ் என்னும் புதிய கிணற்றில் குதிப்பீங்க.

துலாம்

அடுத்தடுத்து வருமானமும் லாபங்களும் வரும். ரொம்ப காலம் காத்திருந்த தொகைகள் கைக்கு வரும். உங்களுக்குத் திரும்ப வர வேண்டிய அல்லது நீங்க திருப்ப வேண்டிய கடன்கள் கேட்டுக்கேட்டு ஓய்ந்த நிலையில் ஒரு முடிவுக்கு வரும்.  குழந்தைங்க உங்களை மனம் நோகப் பேசினாலும் சரி.. அவங்க செயல்கள் உங்களுக்கு டென்ஷன் ஏற்படுத்தினாலும் சரி.. சற்றே பொறுமையை அணிந்து கொள்ள வேண்டும். சரியாகும். சரியாவாங்க.  மம்மி கிட்ட சண்டை போடாதீங்க, நல்ல வேளையாய்க் குடும்பம் ஜாலியா சந்தோஷமா இருக்கும்.  சின்ன சின்ன ஆரோக்யப் பிரச்சினைகள்  டென்ஷன் தரும். நீங்க டென்ஷன் ஆக வேண்டாம். தன்னம்பிக்கை கூடும். கணவருக்கு/ மனைவிக்கு  நிறைய முன்னேற்றம் உண்டு.  மாணவர்கள் நினைச்சே பார்க்க முடியாத மார்க்ஸ் வாங்குவீங்க. வெரி குட். கங்கிராட்ஸ்.

விருச்சிகம்

பிசினஸ் செய்யறவங்களுக்கு, விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிடவும் கூடுதலாக இருப்பது உற்சாகம் தரும். பழைய பாக்கிங்க வசூலாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குத் தேவையான பணம் இருப்பதால் சிரமம் எதுவும் இருக்காது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். நீங்க இந்த வீக் நிறைய்ய்ய்ய்ய்ய முயற்சிகள் செய்து பாடுபடுவீங்க என்பதால், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடல்நலம் சீராகி உற்சாகத்தோடு செயல்படுவீங்க. கணவன்- மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். பிள்ளைங்களின் மேற்படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். ஒரு சில காரியங்களில் தடைகள் ஏற்பட்டாலும் கடைசி நேரத்தில் காரியம் கைகூடிவிடும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீங்க.

தனுசு

பெரிய பதவில இருக்கறவங்களுக்குப் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். வீட்டில் சிறிய அளவில் சுபநிகழ்ச்சி ஒன்று நடப்பதற்கான சான்ஸ்உள்ளது. பணவரவும் திருப்தி கரமாக இருக்கும். பணிபுரியும் பெண்களுக்கு யோகமான வாரம் இது. அரசு வேலைக்காக எடுத்த முயற்சி கைகூடலாம். தொழில் செழிக்கும். குடும்பத்தில் உங்களைப் புரிஞ்சுக்காம இருந்தவங்கள்ளால் இப்ப வந்து வணங்கி வாழ்த்திக் கட்டிப்புடிச்சு லைக் செய்வாங்க. குழந்தைங்க கிட்ட கொஞ்சம் அனுசரிக்க வேண்டியிருக்கும். சரியாயிடுவாங்க. விலகிப்போன சொந்தங்கள் விரும்பி வந்து ஜாயின் செய்வாங்க. உங்க வீட்ல சுபச்சடங்குகள் அடுத்தடுத்து நடைபெற வழிபிறக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய முன்னேற்றம் கிடைக்கும்.

மகரம்

பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்பட்டாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். பிள்ளைகளால் புகுந்தவீட்டு உறவினர்களிடையே கௌரவம் உயரும். அரசின் சலுகைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும் . சீக்கிரம் பேக் செய்யுங்க. பாஸ்போர்ட் ரெடியாத்தான் இருக்கும்.. விசாவுக்கு அப்ளை செய்விங்க. உடனே அதுவும் கிடைக்கும். கிளம்புங்க.. கிளம்புங்க.. கணவருக்கு/ மனைவிக்கு நிஜமாவே நல்ல செய்திகள் மெசேஜிலும்  மெயிலிலும் வரும்.  கணவருடன்/ மனைவியுடன்  இஷ்டத்துக்கு வாக்குவாதம் செய்ய வேண்டாம். அப்புறம் “சே இப்டி பேசிட்டேனே” என்று உங்களை நீங்களே குற்றம் சொல்லவும் வேண்டாம். இந்த வாரம் நீங்க தொட்டதெல்லாம் தங்கமாகும்.முயற்சியைக் கைவிடாதீங்கப்பா. நெவர்.

கும்பம்

என்பதால் கவனமாக இருக்கவும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்துல செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அக்கம்பக்கத்தில் இருக்கும் தோழியரிடம் கடன் வாங்க நேரிடும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் லேடீஸ் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட சான்ஸ்உள்ளதால் பொறுமை காப்பது நல்லது. திட்டமிடாமல் செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீர் திடீரென வருமானம் வந்து மகிழ்விக்கும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். கடன்சுமை குறைய புதிய வழிபிறக்கும். கட்டிடப் பணி தொடரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் சுபமான கொண்டாட்டம் உங்களை ஜாலியாக்கும்.

சந்திராஷ்டமம் :  அக்டோபர் 12 முதல் அக்டோபர் 15 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

மீனம்

அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் ஒங்களோட பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புகள், லாட்டரி யோகங்கள், புண்ணியத்தல தரிசனங்கள் ஆகியவை ஏற்படும். பண விஷயத்தைப் பொறுத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும்.  அரசுப் பதவியில் உள்ளவர்கள் அதிகாரிங்க தயவால் அனுகூலமான பலன்கள் அடைவர். வீட்டில் பல காலமாய்க் காத்திருந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குறிப்பாய்க் கல்யாணத்திற்குக் காத்திருந்த குடும்ப நபருக்குக் கல்யாணம் ஆகும். அது நீங்களாகவும் இருக்கலாம். பேச்சில் கவனம்னா கவனம் அவ்ளோ கவனம் செலுத்தணும். உங்க பணிவாலும் செயல் திறமைகளாலும்  மேலதிகாரியைக் கவர்ந்திழுப்பீங்க. சகோதர சகோதரிங்க உங்களுக்கு நன்மை செய்வாங்க. எதிரிகள் பலம் குறையும். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீங்க.

சந்திராஷ்டமம் :  அக்டோபர் 15 முதல் அக்டோபர் 17 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்