இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இருந்து அஸ்வின் வெளியேறியதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அவசரம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத சூழல் காரணமாக ராஜ்கோட்டில் நடைபெற்றுவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அஸ்வின் தெரிவித்ததை அடுத்து அதனை ஏற்றுக்கொண்டு அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக நேற்று (16-2-2024) நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்தில் 500வது விக்கெட்டை விழ்த்தி டெஸ்ட் போட்டியில் 500 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார்.