
‘ஓ மை கடவுளே’ படத்திற்கு பிறகு, அசோக்செல்வன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இயக்குநர் சசி இயக்கி வரும் ‘தீனி’ படத்தில் அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா போன்றோர்கள் நடித்து வருகிறார்கள்.. இதன் ட்ரெய்லர் நாளை வெளியாக இருக்கிறது.
அனி ஐ.வி. சசி இயக்கும் இப்படத்தினை பாபிநீடுபி வழங்குகிறார். மேலும் தென்னிந்தியாவின் பிரபல நிறுவனங்களான, ஸ்ரீ வெங்டேஷ்வரா சினி சித்ரா எல் எல் பி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இப்படத்தினை தயாரிக்கின்றன.
பிரேமம் படத்தில் சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்த ராஜேஷ் முருகேசன் தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுதும் முடிக்கப்பட்டு, போஸ்ட் புரடகஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]