ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க பாஜக அரசியல் விளையாட்டை ஆரம்பித்து உயுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம்சாட்டி உள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக அசோக் கெலாட் உள்ளார். இந்நிலையில் இவர் இன்று  செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறோம். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற முயலுகிறோம். ஆனால் ராஜஸ்தான் மாநில அரசை கவிழ்க்க பாஜக முயலுகிறது. அதற்காக 10 முதல் 15 கோடி ரூபாய் செலவழிக்க தயாராகி உள்ளது.
2014ம் ஆண்டுக்கு பிறகு பாஜக மோசமாக மாறி விட்டது. மதத்தை பயன்படுத்தி பிரிவுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். ராஜஸ்தானில் இந்த அரசாங்கம் அதன் முழு காலத்தையும் நிறைவு செய்யும். அடுத்த தேர்தலில் வெற்றிக்கான செயல்களில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.