பெங்களூர்

பாஜகவின் வேட்பாளர் பட்டியலால் எடியூரப்பா அதிருப்தி அடைந்துள்ளதால் மூன்று நாட்கள் தேர்தல் பிரசாரத்துக்கு வராமல் இருந்துள்ளார்.

கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா. இவர் மறைந்த அமைச்சர் அனந்தகுமாரின் மனைவியான தேஜஸ்வினிக்கு இம்முறை தெற்கு பெங்களூரு மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க பரிந்துரை செய்தார். பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் தேஜஸ்வினியின் பெயர்  இடம் பெறவில்லை. தேஜஸ்வினிக்கு பதிலாக இளம் வழக்கறிஞரான தேஜஸ்வி சூர்யா நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர் பாஜகவில் வயதின் மிகவும் இளைய வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது சிபாரிசை பாஜக தலைமை ஏற்காததால் எடியூரப்பா மிகவும் வருத்தம் அடைந்துள்ளதாக அவருக்கு மிகவும் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துளது. அத்துடன் அவர் மூன்று நாட்கள் தேர்தல் பிரசாரத்தில்கலந்துக் கொள்ளாமல் தவிர்த்து வருவதாகம் கூறப்படுகிறது.

இது குறித்து மற்றொரு பாஜக தலைவர், ”கடந்த ஞாயிறு அன்று எடியூரப்பா தாவண்கரேவில் ஒரு தேர்தல் நிகழ்வில் கலந்துக் கொள்வதாக இருந்தது. ஆனால் அவர் கடந்த மூன்று நாட்களாக எந்த பிரசாரக் கூட்டத்திலும் கலந்துக் கொள்ளவில்லை. கர்நாடகாவை பொறுத்தவரை எடியூரப்பா ஒரு முக்கிய தலைவர் ஆவார். அவர் தேர்தல் பிரசாரத்தை புறக்கணிஅது கட்சிக்கு சங்கடத்தை உண்டாக்கும்” என கூறி உள்ளார்