ர்லாண்டோ, புளோரிடா

ரும் 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிட உள்ளதால் இன்று பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

கடந்த முறை நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் போட்டியிட்டனர். டிரம்ப் ஜனநாயக கட்சியின் சார்பிலும் ஹிலாரி கிளிண்டன் குடியரசுக் கட்சியின் சார்பிலும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக பதவி ஏற்றார்.

வரும் 2020 ஆம் வருடம் மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. மீண்டும் அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட உள்ளார். அதை ஒட்டி இன்று புளோரிடா மாகாணத்தில் உள்ள ஓர்லாண்டோவில் தனது தேர்தல் பிரசாரத்தை அதிகாரபூர்வமாக தொடங்கினார். இந்த பிரசாரக் கூட்டத்தில் சுமார் 20000 பேருக்கு மேல் கலந்துக் கொண்டனர்.

டொனால்ட் டிரம்ப் தனது உரையில். “உலக நாடுகள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஒரு எதிரிகள் கண்ணோட்டத்தில் பார்த்து வருகிறது. நாட்டின் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி நாட்டை சீரழிக்க முயற்சி செய்து வருகிறது. ஆனால் நாம் இந்த தேர்தலின் மூலம் அமெரிக்காவை சிறப்பாக மாற்றுவோம். அதற்காக வாக்குப்பெட்டியில் ஒரு பூகம்பத்தை சென்ற முறையைப் போல் மீண்டும் உருவாக்குவோம்.

எனது அரசு உருவாக்கி உள்ள வேலைவாய்ப்பு திட்டங்கள் இந்த தேர்தலில் எனக்கு கை கொடுக்கும் என நம்புகிறேன். இந்த தேர்தல் மக்களாகிய உங்களுடையது மற்றும் உன்க்கள் குடும்பங்களுக்கானது. நாட்டின் தலைவிதியையும் உங்கள் எதிர்காலத்தையும் இந்த தேர்தலே நிர்ணயம் செய்ய உள்ளது. நாங்கள் இந்த பிரசாரத்தை சிறந்த சாதனைகளுடன் தொடங்கி இருக்கிறோம். ” என குறிப்பிட்டுள்ளார்.