திருவண்ணாமலை:
லைஞர் மகனான நான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைக்கான தேர்தல் மே முதல்வாரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. தேர்தலை சந்திக்க திமுக முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 29ம் தேதி முதல் மக்களைச் சந்திப்பதாக அறிவித்தார்.

அதன்படி முதல்நாளாக இன்று திருவண்ணாமலையில் பிரசாரத்தை துவக்கி வைத்து பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால், 100 நாட்களில் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற வாக்குறுதியை அளிக்கிறேன் என்று உறுதி அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது ரூ.7,000 கோடி அளவுக்கு விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்றும், கருணாநிதி போல் அளித்த வாக்குறுதியை நானும் நிறைவேற்றுவேன் என்றும் தெரிவித்தார்.