ரிஷிகேஷ் :

திநீர் மாசடைவதில் முதலிடம் உண்டென்றால் அது கங்கை நதியையே சேரும். நதிக்கரையை ஒட்டி வாழும் மக்கள் ஒரு புறம் இதை மாசுபடுத்தினால், இந்தியா முழுவதிலும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் விட்டுச்செல்லும் கழிவுகள் மறுபுறம் இதை மாசடைய செய்கிறது.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு நிலவி வரும் வேலையில் மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்டுள்ளதால், இயற்கை அன்னை தன்னைத்தானே இந்த கழிவுகளில் இருந்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள்.

கங்கை நதி எப்போதும் சாக்கடையாக காணப்படும் ரிஷிகேஷ் பகுதியில், ஊரடங்கால் புதிய கழிவுகள் ஏதும் சேராத நிலையில், இமய மலை பகுதியில் கோடைகாலத்தில் பனிமலை உருகி ஆற்றில் வெள்ளமாக ஓடுவதால், இந்த நதியில் தேங்கி இருந்த அழுக்கு அனைத்தும் அடித்துச்செல்லப்பட்டு, கண்ணாடி போல் உள்ளது.