எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வீட்டில் எந்தெந்த இடங்கள் பிடிக்கும்? – பகுதி

வீட்டில் எவ்வளவு இடம் இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட இடத்தில் தான் நாம் அதிக நேரம் செலவு செய்ய விரும்புவோம். அவரவர் ராசியின் அடிப்படையில் அவர்கள் தங்களுடைய வீட்டில் எந்த இடத்தில் அதிகமாக நேரம் செலவு செய்ய விரும்புகிறார்கள்? என்பதை இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம்.

சிலர் அந்த இடத்தில் அதிக நேரம் இருந்தால் தான் ஓய்வாக உணர்வார்கள். அது அவர்களுடைய மன அழுத்தத்தைக் குறைக்கும். அப்படிப்பட்ட இடங்கள் என்னென்ன? உங்களுடைய ராசிக்கு நீங்கள் எந்த இடத்தில் அதிக நேரம் இருப்பீர்கள்? என்பதைத் தெரிந்து கொள்ள இப்பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

இன்று நான்காம் பகுதியில் மேலும் மூன்று ராசிகளைக் குறித்துக் காண்போம்

 

மகரம்

மகர ராசிக்காரர்கள் கடமையே கண்ணியம் கட்டுப்பாடு என நினைப்பவர்கள். எங்கு இருந்தாலும் இவர்களுக்கு தங்களுடைய கடமையில் கவனமாக இருக்கிறார்கள். வேலை என்று வந்துவிட்டால் சுற்றி இருக்கும் யாரும் இவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. வீட்டில் கூட வேலையைப் பற்றிய சிந்தனையை இவர்களுக்கு இருக்கும். ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டே இருப்பார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இயற்கையை நேசிப்பவர்கள். இயற்கை சார்ந்த சூழலில் அதிகம் செலவிடுவதை விரும்புவார்கள். மொட்டை மாடி., தோட்டம், வீட்டின் பின்பகுதி போன்ற இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவார்கள். குடும்பத்தோடு நேரம் செலவிடுவதும் இவர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் பொதுக்கூடத்தில் அனைவரும் இருக்கும் இடத்தில் அதிகமாக நேரம் செலவிடுவதை விரும்புகிறார்கள். உட்கார்ந்து கொண்டிருந்தாலும் எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பார்கள் இவர்கள். பலர் சுற்றி இருந்தாலும் இவர்களுடைய சிந்தனை வேறெங்கோ இருக்கும்.