சென்னை

மிழகத்தில் நாளை முதல் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தடை என்பதால் உரிமையாளர்கள் அவகாசம் கோரி உள்ளனர்.

நாளை முதல் தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்க அனுமதி கிடையாது எனப் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இந்த தடையை மீறி இயங்கும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் நாளை முதல் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை சந்தித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கால அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.

பேருந்து உரிமையாளர்கள்,

”வரும் 3 நாட்கள் விடுமுறை என்பதால் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வெளி மாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளனர், எனவே தடையை அமலாக்க கால அவகாசம் வழங்க வேண்டும்”

எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

அமைச்சர் சிவசங்கர் இது தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்வதாக தெரிவித்துள்ளார்.