காலை 10.45 மணி நிலவரப்படி, திமுக 129 தொகுதிகளிலும் அதிமுக 104 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
திமுக அதிமுக, தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர். அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சித் தலைவர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன் உள்பட பலர் பின்னடைவை எதிர்கொண்டு வருகின்றனர்.