மும்பை:
ஒப்பந்தம் முடிந்ததால் சென்னை அணியில் இருந்து விலகுகிறேன் என்று 40 வயதாகும் இந்திய முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், திடீரென அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், “சிஎஸ்கே உடனான என் ஒப்பந்தம் முடிவடைகிறது. இந்த அணிக்கு ஆடியது ஒரு பேரனுபவம். அழகான நினைவுகள்… வரும் ஆண்டுகளில் நான் இனிமையாக நினைத்துப் பார்க்கும் நட்புகளை இங்கு வளர்த்துக் கொண்டேன். அனைவருக்கும் நன்றி. சென்னை ரசிகர்களுக்கு நன்றி, வொண்டர்ஃபுல் 2 ஆண்டுகள். ஆல் த பெஸ்ட்” என்று ட்விட் செய்துள்ளார்.

ஐபிஎல் 2018-தொடருக்கு முன் சிஎஸ்கே அணி ஹர்பஜனை அவரது அடிப்படை விலை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel