டில்லி

ன்றுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளதால் மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என முன்னாள் அமைச்சர் ப  சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

கொரோனா பரவுவதைத் தடுக்க மத்திய அரசு மார்ச் 25 முதல்  அறிவித்த ஊரடங்கு இருமுறை நீட்டிக்கப்பட்டது.   இன்றோடு மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது.  ஆயினும் கொரோனா பரவுதல் இன்னும் குறையாமல் உள்ளது.  ஊரடங்குக்குப் பிறகு இந்தியாவில் முன்பைவிட பாதிப்பு அதிகரித்துள்ளது.  இது மக்களிடையே கடும் அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் தனது டிவிட்டரில் ”கொரோனா தொற்று நேற்று மட்டும் 4675 பேருக்குப் பரவி உள்ளது.  இனி ஒவ்வொரு மனிதரும் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தொற்றில் இருந்து தங்களை தாங்களே பாதுக்காத்துக் கொள்வது மட்டுமே ஒரே வழியாகும்.

பாஜக அரசால் கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க முடியாது. இதற்குக் காரணம் அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடப்பதாகும்.,  இதைச் செய்ய வேண்டிய உள்ளாட்சி அமைப்புக்கள் பல மாநிலங்களில் இல்லாமலும் அல்லது அதிகாரம் இன்றியும் உள்ளன.

இன்றுடன் ஊரடங்கு 3.0 முடிவடைகிறது.  இந்த அரசு என்ன செய்யப் போகிறது?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.