கோலாலம்பூர்

லேசிய நாட்டில் இருந்த கடைசிப் பெண் சுமத்ரன் வகை காண்டாமிருகம் நேற்று இறந்ததை ஒட்டி இந்த இனம் முற்றிலும் அழிந்ததாக மலேசிய அரசு அறிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ஒன்றான காண்டாமிருகம் ஐந்து வைக்கப்படும்.  அவைகளில் மூன்று வகை ஆசியாவிலும் இரண்டு வகை ஆப்ப்ரிக்காவிலும் உள்ளன.   ஆசியாவில் உள்ள காண்டாமிருகங்களில் சுமத்ரன் என்னும் இனத்தைச் சேர்ந்த காண்டாமிருகமும் ஒன்றாகும்.  இந்த காண்டாமிருகங்கள் மனித வேட்டைகளால் மிகவும் அழிந்துள்ளன.

சுமத்ரன் காண்டாமிருகங்கள் எண்ணிக்கையில்  குறையத் தொடங்கின   இந்த வகை காண்டாமிருகங்கள் உலகெங்கும் சுமார் 30 மட்டுமே  உள்ளதாக பலரும் கூறி வந்தனர்.  ஆனால் மலேசியாவில் உள்ள இரு சுமதரன் காண்டாமிருகங்கள் மட்டுமே இதுவரை உலகில் இருந்துள்ளதாக அரசு தகவல்கள் தெரிவித்து வந்தன.

இந்த இரு சுமதரன் காண்டாமிருகங்களில் ஒன்று ஆண் மற்றொன்று  பெண் ஆகும்.  இந்த இனத்தை வளர்க்க மலேசிய அரசு எடுத்த பல முயற்சிகள் தோல்வி அடைந்தன.  கடந்த மே மாதம் கடைசி ஆண் சுமத்ரன் காண்டாமிருகம் உயிர் இழந்தது.  மிதமுள்ள ஒரு பெண் காண்டாமிருகமான இமான் நேற்று மாலை  சுமார் 5.35 மணிக்கு உயிர் இழந்தது.

இந்த பெண் மிருகம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது   இந்த பெண் காண்டாமிருகத்டை தாங்கள் கவனமாக பராமரித்து வந்த போதிலும் அது மரணமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள மலேசிய அரசு இத்துடன் இந்த இனம் முற்றிலும் அழிந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.