மும்பை

ன்று பங்குச் சந்தை 10%  இறங்கு முகத்துடன் தொடங்கியதால்  வர்த்தகம் 45 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்தியப் பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது.  முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.11 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்தனர்.   கொரோனா வைரஸ் காரணமாக உலகப் பங்குச் சந்தையயில் ஏற்பட்ட வீழ்ச்சி இந்தியாவிலும் எதிரொலித்ததாகப் பல வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.

இன்றும் பங்குச் சந்தையில் வீழ்ச்சி காணப்படுகிறது.  இன்று துவக்கத்திலேயே 10% அதிகமாகப் பங்குகள் விலையில் இறங்கு முகம் காணப்பட்டது.   இதனால் பங்குச் சந்தையின் வர்த்தகம் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  கூலிங் பீரியட் என அழைக்கப்படும் இந்த் 45 நிமிடங்களுக்குப் பிறகு வர்த்தகம் மீண்டும் தொடங்க உள்ளது.

அப்போதும் வீழ்ச்சி தொடர்ந்தால்  அடுத்த 10% வீழ்ச்சி அடையும் போது மீண்டும் இரண்டு மணி நேரம் அடுத்த கூலிங் பீரியட் ஆக வர்த்தகம் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்படும்.   அப்போதும் வீழ்ச்சி காணப்பட்டு அடுத்த 5% வீழ்ச்சி அடையும் போது இன்றைய பங்கு வர்த்தகம் முழுவதுமாக நிறுத்தப்படும் என்பதே விதி ஆகும்.