புதுடெல்லி:

டகிழக்கு டெல்லியில் வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய மூன்று பாஜக தலைவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாத போலீசாரை கண்டித்ததற்காக நீதிபதி முரளிதர் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்க்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார்.

நீதிபதி எஸ்.முரளிதரை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாபிற்கு மாற்றி, அவசர முடிவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, சர்வதேச பார் அசோசியேஷனின் மனித உரிமைகள் அமைப்பு., இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்திற்கு, கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

ஐபிஏஹெச்ஹ்ஆர்ஐ (IBAHRI) என்பது மனித உரிமைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள சட்டத் தொழிலின் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் பணியாற்றும் வழக்கறிஞர்களின் ஒரு அமைப்பாகும்.

இந்நிலையில் ஆபத்தான சமூக அமைதியின்மை நேரத்தில் இந்த வழக்கத்திற்கு, மாறாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, இந்தியாவில் நீதித்துறையின் சுதந்திரத்தின் மதிப்பை குறைவாக மதிப்பிடுவது போன்று உள்ளது என்றும், அரசாங்கத்தை கணக்கில் வைத்திருப்பதற்கான நீதித்துறையின் உரிமை சட்டத்தின் ஆட்சிக்கு அடிப்படையானது, மேலும் ஒரு நீதிபதி தனது சுயாதீனமான குரலைப் பயன்படுத்தி எந்த கண்டனமும் இருக்கக்கூடாது, ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.