சென்னையை ’’புறக்கணித்ததால்’’ ரூ.ஆயிரம் கோடியை இழந்த ‘டாஸ்மாக்’’
ஊரடங்கு காரணமாகத் தமிழகத்தில் மதுபானங்களை விற்பனை செய்யும் ‘டாஸ்மாக்’ கடைகள் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்தன.
இந்த 50 நாள் கடை அடைப்பால் 5 ஆயிரம் கோடி ரூபாயை இழந்திருந்தது, டாஸ்மாக்.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபின், சென்னை மற்றும் புறநகர்களைத் தவிர்த்து விட்டு, பிற ஊர்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
திறந்த கையோடு, குவாட்டர் பாட்டிலுக்கு 20 ரூபாய் விலையை உயர்த்தியது, டாஸ்மாக் நிர்வாகம்.
இந்த முறை தமிழக அரசின் ’காமதேனு’ என்று வர்ணிக்கப்படும் டாஸ்மாக் ஏமாற்றிவிட்டது.
விலையை உயர்த்தினாலும் ( முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும் போது) நாள் ஒன்றுக்கு 25 கோடி ரூபாய் வருவாய் குறைந்துள்ளது.
கடந்த 40 நாட்களில் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது..
ஏன்?
டாஸ்மாக் நிறுவனத்துக்குப் பணத்தை அள்ளிக்கொடுக்கும் பிரதான கேந்திரமே சென்னையும், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளும் தான்.
இந்த கடைகள் மூடப்பட்டுள்ளதால், இத்தனை கோடி ரூபாய் நஷ்டம் என்கிறார்கள், டாஸ்மாக் அதிகாரிகள்.
-பா.பாரதி