ண்டன்

பிரிட்டன் மக்களில்  மூன்றில் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் அங்கு ஊரடங்கு முடிவடையலாம் எனப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் ஐந்தாம் இடத்தில் உள்ள பிரிட்டனில் இது வரை 41.26 லட்சத்துக்கு மேல் பாதிக்கப்பட்டு அதில் 1.20 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.  இங்கு கொரோனா தடுப்பூசிகள் அளிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.    இதுவரை மொத்த ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அனைத்து மக்களுக்கு வரும் ஜூலை இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.  இதற்கு முன்பு செப்டம்பர் மாதம் என விதிக்கப்பட்டிருந்த கெடு தற்போது ஜூலை ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்  கடந்த சில நாட்களாகத் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகின்றன.   இதற்கு முக்கிய காரணம் கொரோனா தடுப்பூசிகள் என நம்பப்படுகிறது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், “நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு ஒரே மாதிரியாக இருக்கும்.   கொரோனா தடுப்பூசிகள் மூலம் பரவல் மிகவும் குறைந்து வருவதால் இனி பிரிட்டன் தேசிய சுகாதார பணியாளர்களுக்கு பணிச் சுமை குறைய வாய்ப்புள்ளது.  எனவே பிரிட்டன் ஊரடங்கில் சிறிது சிறிதாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.  விரைவில் ஊரடங்கு முழுமையாக  ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது ஆனால் அதற்கு பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம்” எனத் தெரிவித்துள்ளார்.