அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்கும் ஆர்யா.. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு  மீண்டும் தெலுங்கில் ‘எண்ட்ரி’..

Must read

அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக நடிக்கும் ஆர்யா.. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு  மீண்டும் தெலுங்கில் ‘எண்ட்ரி’..

தெலுங்கில் அல்லு அர்ஜுன் –ராஷ்மிகா ஜோடியாக நடிக்கும் ‘’புஷ்பா’’ என்ற படத்தை சுகுமார் டைரக்டு செய்து வருகிறார்.

’’பான் இந்தியா’’ படமாக உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் 5 மொழிகளில் தயாரிக்கிறது.

இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சு நடத்தினர்.அவரிடம் தேதிகள் இல்லாததால், ஆர்யாவை, வில்லனாக  ஒப்பந்தம் செய்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வருடு’’ என்ற தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக ஆர்யா நடித்துள்ளார்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் ‘ரீ.எண்ட்ரி’’ ஆகும் ஆர்யா, இப்போதும் அல்லு அர்ஜுனுக்கு வில்லன்.

எட்டு மாதங்களுக்குப் பிறகு இந்த படத்தின் ஷுட்டிங் அண்மையில் தொடங்கியது.

படக்குழுவில் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டு பிடிக்கப்பட்டதால், தற்காலிகமாகப் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

-பா.பாரதி.

More articles

Latest article