மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்ட கரடி பொம்மைகளுக்கு உயிர்வந்தால் என்னவாகும் என்ற கருத்தாக்கத்தில் கடந்த 2012-ல் ஹாலிவுட்டில் வெளியாகி ஹிட்டடித்த படம் ‘TED’.
அந்த கருத்தாக்கத்தை எடுத்துக்கொண்டு, தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப, விலை மதிக்கமுடியாத மனிதர் உறுப்புகளைத் திருடும் கும்பலை மையமாக வைத்து டெடி கதையை எழுதியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன்.
பொதுவாக இது போன்ற படங்களில் அதிகமாக சிஜி வேலைகள் இடம்பெற்று இருக்கும். ஆனால், டெடி படத்தை பார்த்த அனைவருமே, படம் இவ்ளோ தத்ரூபமாக இருக்கே என ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர் .
டெடி படத்தை பார்த்த பலரும் அந்த பொம்மைக்குள் யாரோ இருக்கிறார்கள். ஆனால் அது ஆணா, பெண்ணா என்று தான் தெரியவில்லை என மண்டையை போட்டு உடைத்துக் கொண்டிருந்தனர்.
டெடி ரகசியம் தெரியாமல் பலரும் குழம்புவதை பார்த்த ஆர்யா அவர்களின் அவஸ்தைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
டெடி பொம்மையாக நடித்த நபரின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்ட ஆர்யா இவர் தான் அந்த நபர். பாடி சூட் அணிந்து டெடியாக நடித்தவர் நாடக கலைஞர் மிஸ்டர் கோகுல். டெடியின் தலை @NxgenMedia நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டது என பதிவிட்டுள்ளார்.
Here's the man behind the scenes! Mr. Gokul, the theatre artist who wore the body suit and acted out the full body language of #Teddy. The head is a fully 3D generated model with performance capture technology by @NxgenMedia. pic.twitter.com/q4xV52qhsu
— Arya (@arya_offl) March 18, 2021