டில்லி:
தலைநகர் டில்லியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் கன்னத்தில் இளைஞர் ஒருவர் திடீரென பளார் என அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

டில்லியில் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வரும் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து, டில்லியில் உள்ள மோத்தி நகர் பகுதியில் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளரை ஆதரித்து, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது, ஆம்ஆத்மி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் அவருடன் பேரணியாகச் சென்றனர்.
அவர் திறந்த வாகனத்தில் நின்று வாக்கு சேகரித்துக்கொண்டிருந்த கெஜ்ரிவால் மீது, இளைஞர் ஒருவர் திடீரென பாய்ந்து அவரது கன்னத்தில் அடித்தார். இதனால் கெஜ்ரிவால் அதிர்ச்சி அடைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய நபரை ஆத்ஆத்மி தொண்டர்கள் அடித்து உதைத்தனர். அந்த இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[youtube https://www.youtube.com/watch?v=VdiOip_rZpM]