புதுமுக இயக்குநர் சாய் சேகர் இயக்கியுள்ள’அருவம்’ திரைப்படம் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கத்ரீன் தெரசா, சதீஷ், கபீர் சிங் உள்ளிட்ட பலர் சித்தார்த்துடன் நடித்துள்ளனர்.

ட்ரைடென்ட் ஆர்ட்ஸின் ஆர்.ரவீந்திரனுடன் இணைந்து க்ளீம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் சவுந்தர்யா மற்றும் தீபா ஐயர் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். என்.கே ஏகாம்பரம் ஒளிப்பதிவு, செய்ய தேசிய விருது வென்ற பிரவீன் கே.எல் எடிட்டிங்க செய்ய ஜி.துரைராஜ் கலை இயக்குநராக பணிபுரிகிறார்கள். இத்திரைப்படத்தில் ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சியாளராக பணியாற்றுவதோடு வில்லனாகவும் நடிக்கிறார்.

[youtube-feed feed=1]