சென்னை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்து போராடும் நபர்களுக்கு எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததிராய் பதில் அளித்துள்ளார்.
மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் பாடத்திட்டத்தில் எழுத்தாளர் அருந்ததிராயின் Walking with the Comrades புத்தகம் எம்.ஏ. ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த புத்தகத்தில் தடை செய்யப்பட்ட இயங்கங்களான மாவோயிஸ்ட், நக்சலைட்டுகளின் பகுதிகளுக்கு சென்ற அனுபவம் குறித்து அருந்ததி ராய் புத்தகத்தில் எழுதியிருந்தார். இதற்கு, பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து, பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், விவாதித்து, முடிவு எடுக்கப்பட்டு, அருந்ததி ராயின் புத்தகம் நீக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நீக்கப்பட்டதா நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தெரிவித்தார்.
அருந்ததிராயின் புத்தகம் நீக்கப்பட்டதற்கு திமுக உள்பட அரசியல் கட்சிகள் கடும எதிர்ப்பு தெரிவித்தன. சில அமைப்புகள் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்தன.
இந்த விவகாரம், எழுத்தாளர் அருந்ததிராயின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, அவர் தனத விளக்கத்தை தெரிவித்து உள்ளார். அதில், நெல்லை மனோன்மணியம் பாடத்திட்டத்தில் எனது புத்தகம் கற்பிக்கப்பட்டதே இப்போதுதான் தெரியும் என்று வியப்புடன் கூறியவர், தற்போது பாடத்திட்டத்தில் இருந்து எனது புத்தகம் நீக்கியதில் அதிர்ச்சி இல்லை.
நான் ஒரு எழுத்தாளர். எனது பணி எழுதுவதே. பாடத்திட்டத்தில் இடம்பெற போராடுவதல்ல. இலக்கியங்களின் முக்கியத்துவம் அதன் வாசகர்களின் ஆதரவை பொறுத்துதான் இருக்கிறது என பதில் தெரிவித்து உள்ளார்.