சூர்யா தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

குழந்தைகளை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தை சரோவ் சண்முகம் இயக்கவுள்ளார். ஒளிப்பதிவாளராக கோபிநாத், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டராக மேகா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படத்தின் பூஜை நேற்று (டிசம்பர் 14) சென்னையில் நடைபெற்றது.

இதில் அருண் விஜய்யின் மகன் ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். அவருடன் பல்வேறு குழந்தைகளும் நடிக்கவுள்ளனர்.