சென்னை:
நடிகர் அருண் விஜய் இன்று அதிகாலை அளவுக்கதிகமான போதையுடன் காரை ஓட்டிக்கொண்டு தனது மனவியுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் கார் கட்டுப்பாட்டை இழந்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தின் (வேன்) மீது மோதியது. இதில் காவல் வாகனத்தின் பின்புறம் சேதமடைந்தது.
இதனால் அருண் விஜய் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மது சோதனையில், ஆல்கஹால் அளவு 56% இருந்ததால் அவரை காவல் நிலையத்தில் உட்கார வைத்திருந்தனர்.
அருண்விஜய் தகப்பனாரும் நடிகருமான விஜயகுமார் காவல் நிலையத்துக்கு வந்தார். இந்த அருண்விஜய், பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அருண்விஜய் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர் படுத்தி அபராதம் கட்டி காரை எடுத்து செல்லும் படி போலீசார் கூறி இருந்தனர்.
இதற்கிடையே பாண்டிபஜார் ஸ்டேஷனுக்கு செல்லும் வழியில் அருண்விஜய் தப்பி ஓடி விட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
“அருண்விஜய் மீது சாதாரண பிரிவுகளிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அபராதம் கட்டி செல்ல வேண்டியதுதான். ஆனால் அவரோ தன்னை கைது செய்துவிடுவார்களோ என பயந்து போலீசிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுதான் பெரும் குற்றம். ஆகவே கடுமையான பிரிவுகளில் வழக்கு பதியப்படும். தானாகவே சிக்கலை அதிகமாக்கிக்கொண்டார் அருண்விஜய்” என்று காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.
இதுதான் தனால் அவர்மீது கடுமையான வழக்கு பதியப்படும் அது அவருக்கு மேலும் சிக்கலை கொடுக்கும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.